மணிப்பூர் அரசியலில் புதிய திருப்பம்… ஆட்சியை பறிகொடுக்கும் நிலையில் பா.ஜ.க…. ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ்…

மணிப்பூர் அரசியலில் புதிய திருப்பம்… ஆட்சியை பறிகொடுக்கும் நிலையில் பா.ஜ.க…. ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ்…

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் தற்போது முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மணிப்பூர் அரசியல் பரபரப்பாக உள்ளது. அன்று இரவு பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் காங்கிரசுக்கு தாவினர். மேலும் பா.ஜ.க. அரசில் அங்கம் வகித்த தேசிய மக்கள் கட்சியின் 4 அமைச்சர்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோர் பா.ஜ.க.வுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் பா.ஜ.க. அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூர் அரசியலில் புதிய திருப்பம்… ஆட்சியை பறிகொடுக்கும் நிலையில் பா.ஜ.க…. ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ்…

இந்த நிலையில் மணிப்பூர் அரசியலில் புதிய திருப்பமாக நேற்று எதிர்கட்சியான காங்கிரஸை சேர்ந்த தலைவர்கள், இதர கட்சிகள் அடங்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு அம்மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவை சந்தித்தனர். அப்போது, தற்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவராக இருக்கும் ஓக்ரம் இபோபி சிங் தலைமையில் ஆட்சியமைக்க கோரியும், பா.ஜ.க. அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர சட்டப்பேரைவையில் சிறப்பு கூட்டத்தை நடத்தக்கோரியும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மணிப்பூர் அரசியலில் புதிய திருப்பம்… ஆட்சியை பறிகொடுக்கும் நிலையில் பா.ஜ.க…. ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ்…

கவர்னரை சந்தித்த பிறகு காங்கிரஸ் தலைவர் சால்டன் அமோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து, 3 முறை முதல்வராக இருந்த ஓக்ரம் இபோபி சிங் தலைமையில் மதசார்ப்பற்ற அரசை அமைப்போம். ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஓக்ரம் இபோபி சிங் கையெழுத்திட்ட கடிதத்தை கவர்னரிடம் வழங்கினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.