எம்.பிக்கள் சஸ்பெண்ட் : மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

 

எம்.பிக்கள் சஸ்பெண்ட் : மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

மாநிலங்களவையில் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து மக்கவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்துறை தொடர்பான 3 மசோதாக்கள் முதலில் மக்களவையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது. மசோதாக்கள் மீதான எதிர்க்கட்சிகளின் புகார்கள் அவையில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 20ம் தேதி மக்களவையிலும் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.

எம்.பிக்கள் சஸ்பெண்ட் : மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

அன்று மக்களவையில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு, அவைத் துணை தலைவர் இருக்கைக்கு அருகே சென்று முற்றுகையிட்டனர். அதுமட்டுமில்லாமல் அவை விதிமுறைகள் புத்தகத்தை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, துணைத்தலைவரான ஹரிவன்ஸ்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதனையடுத்து, 8 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். இந்த நிலையில் மாநிலங்களவையில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி முழக்கங்கள் எழுப்பிய எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். மேலும், அவையை புறக்கணிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.