‘காலதாமதமின்றி 7 பேரை விடுவிக்க வாய்ப்பு’: அமைச்சர் சி.வி. சண்முகம்

‘காலதாமதமின்றி 7 பேரை விடுவிக்க வாய்ப்பு’: அமைச்சர் சி.வி. சண்முகம்

எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி,சண்முகம் தெரிவித்துள்ளார்.

‘காலதாமதமின்றி 7 பேரை விடுவிக்க வாய்ப்பு’: அமைச்சர் சி.வி. சண்முகம்

இந்நிலையில் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “காலதாமதமின்றி 7 பேரை விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது. விடுதலைக்கு பன்னோக்கு விசாரணை ஆணையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சந்தேகங்களை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளதால் ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் ” என்று தெரிவித்துள்ளார்.

‘காலதாமதமின்றி 7 பேரை விடுவிக்க வாய்ப்பு’: அமைச்சர் சி.வி. சண்முகம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.  கைதாகி 28 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த 7 பேரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களின் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. ஆனால், இதுவரை இவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.