நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடிக்க வாய்ப்பு!

 

நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடிக்க வாய்ப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள், 75 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று பாதுகாப்பாக எண்ணப்படுகின்றன.

நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடிக்க வாய்ப்பு!

வாக்கு எண்ணிக்கையையொட்டி துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, உள்ளூர் போலீசார் என மொத்தம் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 16 மையங்களில் பதிவான வாக்குகள், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட 4 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடிக்க வாய்ப்பு!

இந்நிலையில் இன்று இரவு 12 மணி வரை வாக்கு எண்ணிக்கை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்த நிலையில், முழுமையான முடிவுகள் தெரியவர நள்ளிரவு வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. பிற்பகலுக்கு முன்னணி நிலவரம் தெரியவரும் என்றும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 6 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மாற்றாக, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இதன் காரணமாக இந்த இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். இதனால் கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று தெரிகிறது.