ரயில் நிலையங்களில் உணவகங்கள், மருந்து கடைகள், புத்தக கடைகள் திறக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: ரயில் நிலையங்களில் உணவகங்கள், மருந்து கடைகள், புத்தக கடைகள் திறக்க மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகியவற்றிடம் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டில் நான்கு கட்டங்களாக இதுவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 முதல் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டன.

book stalls

வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் ஏசி பெட்டிகள் இல்லாத 200 ரயில்கள் தினமும் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவுகள் இன்று தொடங்குகிறது. இந்த 200 ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 200 பயணிகள் ரயில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்திற்கான எந்த ரயிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகள் வரத் தொடங்கிய பிறகு உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் ஆகியவற்றின் தேவைகள் அதிகரிக்கும் என்பதால் உடனடியாக அவற்றை திறப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்குமாறு மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகியவற்றிடம் மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Most Popular

வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர்! பணியிலிருந்த 5 காவலர்கள் பணியிடமாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் சந்திரசேகர் என்பவர் அவ்வழியாக வந்த ஆம்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முகிலன் என்பவரை...

பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த வாலிபர், தீயணைப்பு வீரர் உயிரிழப்பு!

பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் தவறிவிழுந்த வாலிபரும், அவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் உயிரிழந்தனர். மேலும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் அருகே செல்லியப்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்...

நான் இன்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.. முடிவு வந்தது- தமிழிசை ட்வீட்

தெலங்கானா மாநிலத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமாகி வீட்டுக்கு வந்து விட்டனர். தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 300 க்கும் அதிகமானோர்...

கல்லூரி தேர்வு விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்- ராமதாஸ்

கல்லூரி தேர்வு விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி...
Open

ttn

Close