கொரோனா நிவாரணம் – உண்டியல் சேமிப்பை வழங்கிய ஏழை தம்பதி!

 

கொரோனா நிவாரணம் – உண்டியல் சேமிப்பை வழங்கிய ஏழை தம்பதி!

நீலகிரி

நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன. இதனால், தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கூடலூர் அரசு கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களும், தொண்டு அமைப்புகளும் உதவி புரிந்து வருகின்றன.

கொரோனா நிவாரணம் – உண்டியல் சேமிப்பை வழங்கிய ஏழை தம்பதி!

இதன்படி, மும்பையை சேர்ந்த செல்லாரம் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்ட 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, கூடலூர் சேவாலயா அமைப்பின் நிர்வாகி பிரியதர்ஷினி, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினார். இதேபோல், திருப்பூர் பப்பீஸ் குரூப் நிறுவனத்தின் சார்பில் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அதன் நிர்வாகிகள் வழங்கினர்.

இதேபோல், உதகை ஆர்.கே.புரம் மகாத்மாபுரம் காலனியை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நந்தகுமார் – காந்திமதி தம்பதியினர், தாங்கள் கூலி வேலை செய்து சேமித்த தொகையான ரூ.3,500-ஐ நேற்று கொரோனா நிவாரண நிதிக்காக ஆட்சியரிடம் வழங்கினர். ஏழ்மையிலும் தங்களுடையே சேமிப்பை பொதுசேவைக்கு வழங்கிய தம்பதிக்கு ஆட்சியர் பாராட்டுதலை தெரிவித்தார். தொடர்ந்து, மேலூர் ஓசாட்டி கிராம மக்கள் சார்பில் நிவாரண தொகையாக 30 ஆயிரம் ரூபாயை கிராமத்தினர் வழங்கினர்.