கொரோனா உறுதியான 30 நாட்களுக்குள் இறந்தால் மட்டுமே அது “கொரோனா மரணம்”- ஐசிஎம்ஆர்

 

கொரோனா உறுதியான 30 நாட்களுக்குள் இறந்தால் மட்டுமே அது “கொரோனா மரணம்”- ஐசிஎம்ஆர்

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் உயிரிழப்பவர்களை மட்டுமே கொரோனா உயிரிழப்பாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் விளக்கமளித்துள்ளது.

கொரோனா உறுதியான 30 நாட்களுக்குள் இறந்தால் மட்டுமே அது “கொரோனா மரணம்”- ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மரணங்கள் பெரும்பாலும் கொரோனா உயிரிழப்பாக கருத்தபடவில்லை எனவும், அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் கூட கிடைக்க வாய்ப்பில்லாமல் போகிறது எனவும் கூறி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும், உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட கோரியும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் தீபக் பன்சால் , கௌரவ் பன்சால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பதில் மனுவை தாக்க செய்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், “ஆர்.டி.பி.ஆர் பரிசோதனை, மரபணு பரிசோதனை, அண்டிஜென் பரிசோதனை ஆகியவற்றால் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவனை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டு நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தால் அது கொரோனா உயிரிழப்பாக எடுத்துக்கொள்ளப்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், கொரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்ட 25 நாட்களுக்குள் 95% உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இருப்பினும் 30 நாட்களுக்குள் நிகழும் உயிரிழப்புகளை கொரோனா உயிரிழப்பாக எடுத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த 30 நாள் என்பது ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியே சென்ற பின்னர் உயிரிழப்பு நிகழ்ந்தாலும் அவை கொரோனா உயிரிழப்பாகவே எடுத்துக்கொள்ளபடும்

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர், விஷம் அருந்தினால் / தற்கொலை / கொலை / விபத்துகளினால் உயிரிழந்தால் அவர்களது உயிரிழப்பு கொரோனா உயிரிழப்பாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது” என தெரிவித்தது.