பெங்களூரு பேருந்துகளில் நடைமுறைக்கு வந்தது ஆன்லைன் பணபரிவர்த்தனை!

 

பெங்களூரு பேருந்துகளில் நடைமுறைக்கு வந்தது ஆன்லைன் பணபரிவர்த்தனை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்தையும் மூடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. அதே போல மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் உள்ளூர் பேருந்து சேவையும் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேறு மாநிலங்களில் பணிபுரிபவர்கள் அந்தந்த இடங்களிலேயே சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. முதல் கட்ட ஊரடங்கை தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பெங்களூரு பேருந்துகளில் நடைமுறைக்கு வந்தது ஆன்லைன் பணபரிவர்த்தனை!

அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் பின்னர் நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது குறைந்த அளவில் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் படி கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலபுர்கி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குறைந்த அளவில் பேருந்து இயக்கப்பட்டன. குறிப்பாக பெங்களூரில் பயணிகள் வாரம் அல்லது மாதம் பாஸ் வைத்துக் கொண்டு பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பேருந்துகளில் கியூ.ஆர் கோடு மூலமாக ஆன்லைனில் பணபரிவர்த்தனை செய்யலாம் என்று பி.எம்.டி.சி அறிவித்தது. அதன் படி, நடத்துனர்கள் பயணிகளிடம் இருந்து பணத்தை கையில் வாங்காமல் ஆன்லைனில் செலுத்துவது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.