வேலைத்தேடும் இளைஞர்களுக்காக.. ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ தொடக்கம்!

 

வேலைத்தேடும் இளைஞர்களுக்காக.. ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ தொடக்கம்!

தமிழகத்தில் பலர் படித்த படிப்புக்கு வேலை இல்லாமல் சுற்றி வருகின்றனர். அதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தேடித் தரும் விதமாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலை தேடும் இளைஞர்களையும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைக்கும் நோக்கில் அரசின் சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

வேலைத்தேடும் இளைஞர்களுக்காக.. ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ தொடக்கம்!

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேலை தேடும் இளைஞர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ (www.tnprivatejobs.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இளைஞர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதன் மூலம் தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்கள் பணி நியமனம் செய்ய வழிவகை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சேவை இலவசமாக வழங்கப்படுவதாகவும் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் நேரடியாக நேர்காணல் நடத்தாமல் ஆன்லைன் வழியாக பணி நியமனம் செய்து வேலை வாய்ப்புகளை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.