ஆன்லைன் வகுப்பும் நீட்டும் நவீன தீண்டாமை… உதயநிதி சொல்கிறார்

 

ஆன்லைன் வகுப்பும் நீட்டும் நவீன தீண்டாமை… உதயநிதி சொல்கிறார்


ஆன்லைன் வகுப்பும், நீட் தேர்வும் நவீன தீண்டாமை என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் போன் வசதி இல்லை என்பதாலும், ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்றும் மாணவர்கள்

ஆன்லைன் வகுப்பும் நீட்டும் நவீன தீண்டாமை… உதயநிதி சொல்கிறார்

தற்கொலை செய்துகொள்ளும்போக்கு அதிகரித்துள்ளது. மேலும், நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமலும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை தொடர்கிறது.
வசதியானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஒரு பிரச்னையே இல்லை. மொபைல் போன், இணைய வசதி பற்றி தெரியாத, பெற வசதி இல்லாத குடும்பங்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்பது அநீதியாகவே உள்ளது. எல்லோரும் ஸ்மார்ட் போன், மொபைல் போன் மூலம் ஆன்லைன் வகுப்பில்

ஆன்லைன் வகுப்பும் நீட்டும் நவீன தீண்டாமை… உதயநிதி சொல்கிறார்

பங்கேற்கும்போது, தங்களால் முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை வருகிறது. படிக்க முடியவில்லை என்ற ஏக்கம் வருகிறது. இந்த பிரச்னையை எதிர்கொள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.


இந்த நிலையில் இது குறித்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேர்வுக்கு முன்பே பலி கேட்கும் நீட்-ஆன்லைன் வகுப்பு ஏற்றத்தாழ்வு… கல்வியை இப்படி தற்கொலை களமாக்கும் முதுகெலும்பில்லா அடிமைகள்-ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளால் பிஞ்சு மரணங்கள் தொடர்வதை ஏற்க முடியாது. ஏழை-எளிய மாணவ செல்வங்களுக்கு எதிரான இந்நவீன தீண்டாமையை ஒழிப்போம்!” என்று கூறியுள்ளார்.