முதுகலை படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!

 

முதுகலை படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த மாணவர் சேர்க்கை அண்மையில் தொடங்கியது. விண்ணப்பம், கலந்தாய்வு என அனைத்தையும் ஆன்லைன் வழியாகவே செய்யுமாறு அரசு அறிவுறுத்தியிருப்பதன் பேரில், ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் தொடங்கிய நிலையில், நேற்று முதுகலை படிப்புக்கான அறிவிப்பை உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

முதுகலை படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!

அதாவது, நவம்பர் 20ம் தேதி வரை www.tngasapg.in, www.tngasapg.org ஆகிய இணையத்தள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் பதிவுக்கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும் என்றும் அறிவித்திருந்தார். அதன் படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியிருக்கிறது. கொரோனாவால் மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியிருப்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.