’ஒரு ட்விட்… ஒரு வரி… ஒரு புயல்’ குஷ்புவின் புதிய ட்விட்

 

’ஒரு ட்விட்… ஒரு வரி… ஒரு புயல்’ குஷ்புவின் புதிய ட்விட்

தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துவருகின்றன. குறிப்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இதன் பல அம்சங்களை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் குஷ்பு பதிந்திருந்த ஒரு ட்விட் சர்ச்சைக்கு உள்ளானது.

#NewEducationPolicy2020 A welcome move.

’ஒரு ட்விட்… ஒரு வரி… ஒரு புயல்’ குஷ்புவின் புதிய ட்விட்

இதனால் குஷ்பு பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்திருக்கும் ஒரு திட்டத்தை வரவேற்கிறார் என்று பின்னூட்டங்கள் இடப்பட்டன. இன்னொரு புறம் இந்தத் திட்டத்தில் உள்ள நெகட்டிவ்வான விஷயங்களைப் பட்டியலிட்டவர்களும் உண்டு. இன்னும் சில நடிகர் சூர்யாவின் கருத்துகளைப் பட்டியலிட்டு பின்னூட்டம் இட்டார்கள்.

பாஜவின் குஷ்பு சேரவிருக்கிறார் என்ற செய்தி சில நாள்களாக வந்துகொண்டிருந்த நிலையில் இந்த ட்வீட் மூலம் அக்கட்சிக்கு தூது விட்டிருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள்.

தன்னப் பற்றிய சர்ச்சைகளுக்குப் பதில் அளித்த குஷ்பு, ’புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது , அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன்” என்று விளக்கம் அளித்தார்.

’ஒரு ட்விட்… ஒரு வரி… ஒரு புயல்’ குஷ்புவின் புதிய ட்விட்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, குஷ்புவின் ட்விட் பற்றி குறிப்பிடுகையில், “காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிர்ச்சியின்மை” என்று தெரிவித்திருந்தார்.

’ஒரு ட்விட்… ஒரு வரி… ஒரு புயல்’ குஷ்புவின் புதிய ட்விட்

சமூக ஊடகங்களில் இரண்டு நாள்களாக குஷ்புவின் புதிய கல்விக்கொள்கை குறித்த நிலைபாடு பற்றி பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர், பலரின் ட்விட்டுகளுக்கு குஷ்பு நேரிடையாகப் பதில் அளித்தார்.

இந்தச் சர்சையால் இப்போது புதிய ட்விட் ஒன்றைப் பதிந்துள்ளார். அதில், ஒரு ட்விட்… ஒரு வரி… புயலைப் பார்த்துவிட்டேன். என்று குறிப்பிட்டுள்ளார்.