ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா – ஊராட்சி தலைவருக்கு மக்கள் பாராட்டு!

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா – ஊராட்சி தலைவருக்கு மக்கள் பாராட்டு!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் முயற்சியை மேற்கொண்டுள்ள ஊராட்சி தலைவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா – ஊராட்சி தலைவருக்கு மக்கள் பாராட்டு!

அங்குள்ள் வீராண நல்லூர், ஊராட்சியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. முதல் நாளான இன்று 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அரச பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

முதற் கட்டமாக சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும், காட்டுமன்னார்கோவில் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரங்களிலும், கிராமபுற பள்ளி கூடங்கள் மற்றும் பொது இடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா – ஊராட்சி தலைவருக்கு மக்கள் பாராட்டு!

வீராண நல்லூர் கிராமத்தை பசுமை ஊராட்சியாக மாற்ற, தனது சொந்த முயற்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அரச பாண்டியன் ஈடுபட்டு வருவது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அப்பகுதி மக்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.