ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் : முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

 

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் : முதல்வர் பழனிசாமி இன்று  ஆலோசனை!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். அப்போது பேசிய அவர் தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று அறிவித்த நிலையில் கொரோனா பாதிப்பால் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் : முதல்வர் பழனிசாமி இன்று  ஆலோசனை!

இந்நிலையில்,அக். 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளதின் எதிரொலியாக ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் : முதல்வர் பழனிசாமி இன்று  ஆலோசனை!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் என்பது மக்கள் இந்த கடையில் தான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்று இல்லாமல், எங்கு வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்பதே ஆகும். ஆனால் இந்த திட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.