ஆக்சிஜனின்றி தவித்த ஒன்றரை வயது குழந்தை… ஆம்புலன்ஸிலேயே பரிதாப மரணம்!

 

ஆக்சிஜனின்றி தவித்த ஒன்றரை வயது குழந்தை… ஆம்புலன்ஸிலேயே பரிதாப மரணம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் நாடே திணறிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல சவால்களை சுகாதாரத்துறை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் விசாகப்பட்டினம் அருகே ஒன்றைரை வயது குழந்தை மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சிஜனின்றி தவித்த ஒன்றரை வயது குழந்தை… ஆம்புலன்ஸிலேயே பரிதாப மரணம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அச்சுதாபுரம் பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை ஜான்விதாவுக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால் குழந்தையை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆக்சிஜனின்றி தவித்த ஒன்றரை வயது குழந்தை… ஆம்புலன்ஸிலேயே பரிதாப மரணம்!

இதையடுத்து, விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதால் ஆக்சிஜன் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அங்கு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் இல்லாததால் குழந்தை இரண்டு மணி நேரமாக ஆம்புலன்சிலேயே இருந்து உயிரிழந்துள்ளது. மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.