மீண்டும் ஒரு கருப்பின இளைஞர் தாக்கப்பட்டார் – அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்

 

மீண்டும் ஒரு கருப்பின இளைஞர் தாக்கப்பட்டார் – அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்

கடந்த மே மாதம் 25 –ம் தேதி ஜார்ஜ் ஃப்ளாய்ட் எனும் கருப்பினத்தைச் சேர்ந்தவரின் கழுத்தில் கால் முட்டியால் அமெரிக்க போலிஸ் ஒருவர் அழுத்தி, நசுக்கினார். அதில் மூச்சுத் திணறி ஃப்ளாய்ட் இறந்தே விட்டார்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் கருப்பினத்தவர் மத்தியிலும் ஜனநாயக சக்தியினரிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டி போராட்டங்கள் நடந்ததன. போராட்டம் வன்முறையாகவும் மாறின. கொரோனா அச்சுறுத்தல் இருந்த நிலையில் அமெரிக்க மக்கள், காவல் துறையினருக்கு எதிராக வீதியில் இறங்கி போராடினார்கள்.

மீண்டும் ஒரு கருப்பின இளைஞர் தாக்கப்பட்டார் – அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்

இறுதியில் காவலர்கள் பொதுமக்கள் முன் மண்யிட்டு இந்தக் கொலைக்காக மன்னிப்பு கேட்டனர். இதனால் பெருமளவில் பதற்றம் தணிந்தது.

ஆனாலும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலைக்காக பல இடங்களில் சிறிய அளவிலான போராட்டங்கள் நடந்தவண்ணமே உள்ளன. சென்ற வாரத்தில்கூட இதுபோன்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.

கருப்பின ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சூடே முழுமையாக தணியாத நிலையில், தற்போது மற்றொரு கருப்பின இளைஞர் அமெரிக்க ராணுவ வீரரால் தாக்கப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு கருப்பின இளைஞர் தாக்கப்பட்டார் – அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவரோடு ராணுவவீரர் பேசியதில் தகராறாகி, ஃப்ளாய்ட்டை எப்படி கீழே தள்ளி தலையை அழுத்திக்கொண்டிருந்தார்களோ அதேபோல இந்த இளைஞனையும் அந்த ரானுவ வீரர் செய்துள்ளார்.

இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. சம்பந்த இருவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.