“ஓணம் திருநாள், மக்கள் வாழ்வில் அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்” -தமிழக ஆளுநர்

“ஓணம் திருநாள், மக்கள் வாழ்வில் அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்” -தமிழக ஆளுநர்

கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. திருமால் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து, அவனது செருக்கினை அடக்கி, அழித்ததோடு, மகாபலி சக்கரவர்ததி வேண்டியபடி, ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை காண திருமால் அருள் புரிந்தார். அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் நாளே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது.

“ஓணம் திருநாள், மக்கள் வாழ்வில் அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்” -தமிழக ஆளுநர்

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். ஓணம் திருநாளில் நமது அன்பு, இரக்கம், உழைப்பு அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் அர்ப்பணிக்க உறுதியேற்போம். ஓணம் திருநாள், மக்கள் வாழ்வில் அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஓணம் திருநாள், மக்கள் வாழ்வில் அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்” -தமிழக ஆளுநர்

முன்னதாக தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் திருவோணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.