ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரம் ரன்களை கடந்த தினம் இன்று!

 

ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரம் ரன்களை கடந்த தினம் இன்று!

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 13 வருடங்களுக்கு முன்பு இதே தினத்தில் தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.

இந்த மைல்கல்லை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் தான். அத்துடன் இதுவரை உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் இன்னும் கூட ஒருநாள் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களை கடக்கவில்லை. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ப்யூச்சர் கப் ஒருநாள் போட்டித் தொடரின் 2-வது போட்டியில் சச்சின் 15 ஆயிரம் ரன்களை கடந்தார். அப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரம் ரன்களை கடந்த தினம் இன்று!

ஆண்ட்ரே நெல் வீசிய பந்தில் ஓவர்-த்ரோ முறையில் கூடுதல் ரன்னை எடுத்தபோது சச்சின் இந்த மைல்கல்லை எட்டினார். அப்போட்டியில் முதலில் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய யுவராஜ் சிங் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சச்சினும், கங்குலியும் இணைந்து 100 ரன்களை கடந்தனர். இதனால் அப்போட்டியில் இந்திய அணி எளிதில் வென்றது. சச்சின் இப்போட்டியில் 93 ரன்கள் எடுத்தார். கங்குலி 42 ரன்களும், யுவராஜ் சிங் 49 ரன்களும் (நாட்-அவுட்), தினேஷ் கார்த்திக் 32 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர்.