அமெரிக்காவின் பாதுகாப்பு விடப்பட்ட நேரடி சவால் – 9/11 தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

அமெரிக்காவின் பாதுகாப்பு விடப்பட்ட நேரடி சவால் – 9/11 தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

இன்று உலகமே தலிபான்கள் தலிபான்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலிபான்கள் தீவிர பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள். அமெரிக்க படைகளும் நேச நாடுகளின் படைகளும் ஆப்கானிஸ்தானை காலிசெய்து கிளம்பியதுமே அதற்குக் காரணம். இது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் ஏன் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள் என்ற கேள்வி எழுமே. அதற்கான பதில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியில் தொடங்குகிறது.

அமெரிக்காவின் பாதுகாப்பு விடப்பட்ட நேரடி சவால் – 9/11 தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

பயங்கரவாதம் எவ்வளவு பெரிய கொடூரமான வியாதி என்பதை அன்றே அனைவரும் தெரிந்துகொண்டனர். ஏனென்றால் தாக்குதல் நடந்தது வல்லரசு நாடான அமெரிக்காவில். அதுவும் தாக்குதல் எங்கே நிகழ்ந்தது இரட்டை கோபுரத்திலும் அதிக பாதுகாப்புகள் நிறைந்த பென்டகனிலும் தான். இதற்கெல்லாம் காரணம் அல்கொய்தா பயங்கரவாதக் குழு. அல்கொய்தா என்றால் ஒசேமா பின்லேடன் தான் அனைவருக்கும் நியாபகம் வருவார். ஆம் அவர் தான் இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர். ப்ளுபிரிண்ட் போட்டு திட்டம் தீட்டி தாக்குதல் நடத்த செய்தது சாட்சாத் அவரே தான்.

அமெரிக்காவின் பாதுகாப்பு விடப்பட்ட நேரடி சவால் – 9/11 தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

பிளாஸ்பேக் படி நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்த 19 பேர் கடத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீதும், ஒரு விமானம் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகன் மீதும் மோதின. கடைசி விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகத்தையை உறைய வைத்த சம்பவங்களின் பட்டியலில் 9/11 தாக்குதல் எப்போதும் இடம்பெறும்.

அமெரிக்காவின் பாதுகாப்பு விடப்பட்ட நேரடி சவால் – 9/11 தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

உலக அரங்கில் அமெரிக்காவின் மதிப்பை இழக்க செய்த சம்பவமாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதேபோல அமெரிக்காவின் பாதுகாப்புக்கு விடப்பட்ட பகீரங்க சவால் தான் இது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்தவர் ஜார்ஜ் புஷ். புஷ்க்கு கோபம் கொப்பளித்தது. கொந்தளித்தார். ஒசாமா பின்லேடனை ஒழித்துவிட்டு தான் என் ஆத்திரம் அடங்கும் என்றார். பின்லேடன் ஆப்கானிஸ்தானில் ஒளிந்திருக்கிறார்; அவருக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர் என அமெரிக்க உளவுத்துறை தகவல் கொடுக்க அதிரடியாக பீரங்கிகளைக் கொண்டு களமிறங்கினார் புஷ்.

அமெரிக்காவின் பாதுகாப்பு விடப்பட்ட நேரடி சவால் – 9/11 தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

ஆப்கானிஸ்தானில் ரத்த ஆறு ஓடியது. இதனிடையே பின்லேடன் அங்கும் இங்கும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க கடைசியில் 2011ஆம் ஆண்டு போட்டுத்தள்ளியது அமெரிக்கா. முன்னதாக தலிபான்களும் தாக்குப்பிடிக்க முடியாமல் மண்டியிட்டனர். இதெல்லாம் வரலாறு. இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்து இன்றோடு 20ஆம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் வீதிகளில் இந்தத் தாக்குதலில் மாண்டவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வருகின்றனர்.