தோண்டியெடுக்கப்பட்ட ட்வீட்கள்…. கிழிந்த முகத்திரை – ஒரே நாளில் பஸ்பமான கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை!

தோண்டியெடுக்கப்பட்ட ட்வீட்கள்…. கிழிந்த முகத்திரை – ஒரே நாளில் பஸ்பமான கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை!

இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் அறிமுக வீரராக ஒல்லி ராபின்சன் களமிறங்கினார். சர்வதேச அரங்கில் அவருக்கு இதுவே முதல் போட்டி. 27 வயதான ராபின்சன் பவுன்சர்கள், ஸ்விங் பந்து போட்டு நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தார். அறிமுக போட்டியிலேயே நான்கு விக்கெட்டுகளை சாய்த்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பந்தால் மட்டுமில்லாமல் தன்னால் பேட்டாலும் பதில் சொல்ல முடியும் என்பது போல் பொறுமையாக ரன் சேர்த்து இக்கட்டான நிலையிலிருந்து அணியை மீட்டெடுத்தார்.

தோண்டியெடுக்கப்பட்ட ட்வீட்கள்…. கிழிந்த முகத்திரை – ஒரே நாளில் பஸ்பமான கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை!
தோண்டியெடுக்கப்பட்ட ட்வீட்கள்…. கிழிந்த முகத்திரை – ஒரே நாளில் பஸ்பமான கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை!

இதனால் ஒரே நாளிலேயே புகழின் உச்சிக்குச் சென்றார் ராபின்சன். வானளவுக்குப் புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து ரசிகர்கள் அவர் இங்கிலாந்து அணியின் விடிவெள்ளி என்று ட்வீட்களைத் தெறிக்கவிட்டனர். எந்த ட்விட்டரில் அவர் உச்சாணி கொம்பில் ஏறினாரோ அதே ட்விட்டரிலேயே பரமபதத்தில் பாம்பால் வெட்டப்பட்டு கீழ் இறங்கினார். அதற்குக் காரணம் டீன் வயதில் அவர் போட்ட ட்வீட்கள் தான்.

அந்த ட்வீட்களே அவரது கிரிக்கெட் கேரியருக்கும் உலை வைத்திருக்கிறது. 2013,14ஆம் ஆண்டுகளில் இனவெறி ட்வீட்களையும் பாலியல் ரீதியான ட்வீட்களையும் பதிவிட்டிருக்கிறார். அவரின் ட்விட்டர் பதிவுகளைத் தோண்டியெடுத்த ரசிகர்களுக்கு இந்த ட்வீட்கள் அதிர்ச்சியைப் பரிசளித்திருக்கின்றன. எந்த ரசிகர்கள் அவரைப் புகழ்ந்தார்களோ, அதே வேகத்தில் சாத்தி எடுத்தார்கள். அவரை உடனடியாக அணியிலிருந்து நீக்கியே ஆக வேண்டும் என கொந்தளித்தனர்.

தோண்டியெடுக்கப்பட்ட ட்வீட்கள்…. கிழிந்த முகத்திரை – ஒரே நாளில் பஸ்பமான கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை!

இதையடுத்து விவகாரத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ச்சி செய்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். அவர் உண்மையாகவே ட்வீட்களை பதிவிட்டிருந்ததால், அவரை சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க 7 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்டும் வாரியம் ஏற்க தயாராக இல்லை. அடுத்த போட்டியில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு நாளில் தோன்றி உயிரிழக்கும் ஈசல் போல அவரின் கிரிக்கெட் கேரியர் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது.