4 மணிநேரம் தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ்: மூச்சு திணறலால் உயிரிழந்த முதியவர்!?

4 மணிநேரம் தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ்: மூச்சு திணறலால் உயிரிழந்த முதியவர்!?

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் கணபதி நகர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதனால் இந்த முதியவரும் திருப்போரூர் அடுத்த பொன்மார் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த முதியவரும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

முதியவருக்கு ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு அந்த இடம் சௌகரியமாக இல்லை, மேலும் அங்கு கொடுக்கும் உணவும் சரி வரவில்லை என கூறப்படுகிறது.

4 மணிநேரம் தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ்: மூச்சு திணறலால் உயிரிழந்த முதியவர்!?

இந்நிலையில் முதியவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர நான்கு மணி நேரம் ஆகியுள்ளது. அதுவரை முதியவர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அங்கு ஆம்புலன்ஸ் வந்து முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே அவர் உயிரிழந்துள்ளார்.

4 மணிநேரம் தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ்: மூச்சு திணறலால் உயிரிழந்த முதியவர்!?

ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டது தான் முதியவர் இறப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கூறியுள்ள வண்டலூர் வட்டாட்சியர், ‘மற்றொரு நோயாளியை ஏற்றுக்கொண்டு வந்ததால் 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானது என்றும் முதியவர் ஏற்கனவே சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறினாரா என்பது தெரியவில்லை’ என்றும் கூறியுள்ளார்.