செலவு எகிறியதால் லாபத்தில் கோட்டை விட்ட ஆயில் இந்தியா…

 

செலவு எகிறியதால் லாபத்தில் கோட்டை விட்ட ஆயில் இந்தியா…

ஆயில் இந்தியா நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.381.75 கோடி ஈட்டியுள்ளது.

நம் நாட்டின் இரண்டாவது பெரிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமான ஆயில் இந்தியா தனது செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆயில் இந்தியா நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.381.75 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 42 சதவீதம் குறைவாகும்.

செலவு எகிறியதால் லாபத்தில் கோட்டை விட்ட ஆயில் இந்தியா…
ஆயில் இந்தியா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது மற்றும் அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க பெரிய தொகையை செலவிட்டது போன்றவற்றால் அந்நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.661.53 கோடி ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செலவு எகிறியதால் லாபத்தில் கோட்டை விட்ட ஆயில் இந்தியா…
ஆயில் இந்தியா

2020 செப்டம்பர் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.2,175.87 கோடியை வருவாயாக ஈட்டியிருந்தது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 32 சதவீதம் குறைவாகும். கச்சா எண்ணெய் விலை சரிந்தது மற்றும் இயற்கை எரிவாயு விலை குறைவாக இருந்ததே இதற்கு காரணம்.