Home அரசியல் அரசின் உத்தரவை மதிக்கவில்லை... 150 பேரை வைத்து கூட்டம்... திருச்சி எல்ஃபின் நிறுவனத்துக்கு சீல்!- அதிரடி காட்டிய அதிகாரிகள்

அரசின் உத்தரவை மதிக்கவில்லை… 150 பேரை வைத்து கூட்டம்… திருச்சி எல்ஃபின் நிறுவனத்துக்கு சீல்!- அதிரடி காட்டிய அதிகாரிகள்

தமிழக அரசின் உத்தரவை மீறி 150க்கும் மேற்பட்டவர்களை வைத்து கூட்டம் நடத்திய திருச்சி எல்ஃபின் நிறுவனத்துக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

திருச்சியை மையமாகக் கொண்டு எல்ஃபின் என்கிற நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தை ராஜா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் எல்.எல்.எம் போன்று ஆட்களைப் பிடிப்பார்கள். அதனைத் தொடர்ந்து, இவர்களின் பெயரில் பொருட்களை உருவாக்கி அதனை அவர்களே விற்கச் சொல்லி ஆட்களைப் பிடிப்பார்கள். அதனை ஒவ்வொருவரும் தொடர்ந்து செய்யும் போது அதில் உள்ள நபர்களுக்கு கமிஷன் கொடுப்பார்கள். முதலில் மளிகை பொருட்களில் தொடங்கியவர்கள் நாளடைவில் வீடு கட்டிக் கொடுப்பது, காலி இடங்களை வாங்கி விற்பது போன்ற ரியல் எஸ்டேட் சம்மந்தமான தொழில்களையும் செய்து வந்தனர். ஆரம்பத்தில் நிறையப் பேர் இவர்களை நம்பி சேர்ந்தனர். பிறகு அதிகமாகச் சேர்ந்ததும், ‘அறம் மக்கள் நலசங்கம்’ என்று ஆரம்பித்தனர்.

அத்துடன், மக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றத்தொடங்கினார்கள். அதன் விளைவு தான் தற்போது அடுத்தடுத்த புகார்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. ஏற்கெனவே தஞ்சை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார், அவர்களது மாவட்ட பொறுப்பாளர்கள் கிங்ஸ்லீ மற்றும் பிரசன்னா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே போல இவர்கள் மீது நிறையப் புகார்கள் குவிய, திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் இவர்கள் மீதான வழக்கை விசாரித்து வருகிறது. மூன்றாவது வழக்காகப் புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் தற்போது திருச்சி கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் போட்டு இருக்கிறார்கள். பிரச்னைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து நடந்து வருவதால் தங்களைக் காத்துக் கொள்ள பா.ஜ.க-வில் சேர்ந்துள்ளார். அவரின் சகோதரர் ரமேஷ் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கிறார். அதனை வைத்துக் கொண்டு இவர்களை யாராவது கேள்வி கேட்டால் அடிதடி கட்டப் பஞ்சாயத்து என எல்லா வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு மேல் கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசின் உத்தரவை மதிக்காமல் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்ஃபின் நிறுவனத்தில் மாவட்டங்களிலிருந்து 150க்கும் மேற்பட்டோர் வந்து கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தை அந்த நிறுவனத்தினர் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவளைதளங்களில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஷேர் செய்துள்ளனர். இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர், வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றவர்களை எச்சரித்து அனுப்பினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் காவல்துறையினருடன் சென்ற கிழக்கு வட்டாட்சியர் மோகன், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக எல்ஃபின் நிறுவனத்திற்குச் சீல் வைத்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஒதுங்கிய சசிகலாவால் ஓங்கிய எடப்பாடியின் செல்வாக்கு!

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுபோல் பதவி கொடுத்த சசிகலாவையே ஓரங்கட்டிவிட்டார் திறமைசாலி எடப்பாடி பழனிசாமி. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. கட்சிக்குள் இருந்த கொஞ்ச...

தலைமுடி நீண்டு கருகருவென வளர… இந்த 5 உணவை டிரை செய்து பாருங்க!

வயது அதிகரிக்க அதிகரிக்க முடி உதிர்வதைத் தடுக்க முடியாமல் பலரும் வேதனை அடைகின்றனர். முடி வளர்ச்சி, உதிர்தல், அதன் ஆரோக்கியம் என அனைத்தும் வயது, பாலினம், ஆரோக்கியம் மற்றும் நாம்...

கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் கும்பகோணம் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை இன்று தஞ்சை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை...

ஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்!

மனித உடலில் எதற்காக இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் ஒரு உறுப்பு குடல்வால். அதனால் பயன் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிலருக்கு அது தொல்லையாக மாறுவது மட்டும் தொடர்கிறது. சிறுகுடல்...
TopTamilNews