அக்டோபர் 7. போட்டியில் இருந்து விலகும் ஓபிஎஸ்-சமாதானம் செய்யப்போவது யார் ?

 

அக்டோபர் 7. போட்டியில் இருந்து விலகும் ஓபிஎஸ்-சமாதானம் செய்யப்போவது யார் ?

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் தீர்க்கப்படாமல், தேர்தல் பணிகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது என்கிற இக்கட்டான சூழலில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது.
செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்புக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. அக்டோபர் 7 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7. போட்டியில் இருந்து விலகும் ஓபிஎஸ்-சமாதானம் செய்யப்போவது யார் ?

அடுத்த 10 நாட்களில் முடிவு செய்யப்படும் என ஒத்தி வைத்தாலும், முதல்வர் பதவிக்கான பனிப்போர், தற்போது வார்த்தைப் போராக மாறிவிட்ட நிலையில், அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் எப்படி முதல்வர் வேட்பாளருக்கான முடிவு எட்டப்படும்? என கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம்..

அக்டோபர் 7. போட்டியில் இருந்து விலகும் ஓபிஎஸ்-சமாதானம் செய்யப்போவது யார் ?

”பொதுவாக இருதரப்புக்குள் மனக்கசப்பு என்றால் இரண்டு தரப்பில் இருந்தும் ஏற்றுக் கொள்ளும் பொதுவான மூன்றாம் நபர் தலையிட்டு பிரச்சினையை பேசி தீர்த்து வைப்பார்கள். அப்படி பார்த்தால்,
மூத்த நிர்வாகிகள் மூன்றாம் நபராக செயல்பட வாய்ப்பில்லை. ஓபிஎஸ் – ஒபிஎஸ் என யாரேனும் ஒருவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தாலும் அது கட்சிக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனவே வெளியில் இருந்து மூன்றாவது நபர் மத்தியஸ்தம் செய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 7. போட்டியில் இருந்து விலகும் ஓபிஎஸ்-சமாதானம் செய்யப்போவது யார் ?

தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து, கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ளும் முதல்வர் வேட்பாளர் என்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான். அதிமுக உள்கட்சி விவகாரம் என்பதால் இந்த விஷயத்தில் வேறு யாரும் தலையிடமாட்டார்கள். ஆனால் அதிமுகவை கட்டுப்படுத்தும் மத்தியஸ்த சக்தி என்றால் அது டெல்லி மேலிடம்தான் என கட்சியிருக்கு தெரியும். ஏற்கெனவே, கட்சி விவகாரங்களில் தலையிட்ட தமிழக புள்ளிகள் மூலம் விரைவில் டெல்லி மேலிடம் தீர்த்து வைப்பார்கள் என்றனர்.

அக்டோபர் 7. போட்டியில் இருந்து விலகும் ஓபிஎஸ்-சமாதானம் செய்யப்போவது யார் ?
The Prime Minister, Shri Narendra Modi addressing at the dedication of three key projects related to the Petroleum sector in Bihar to the nation via video conferencing, in New Delhi on September 13, 2020.

டெல்லி மேலிடத்துக்கு ஏன் அதிமுக மீது இத்தனை அக்கறை ? என்றால், ” அதிமுகவுக்குள் குழப்பம் இருக்கும்போதே, அதன் மூலம் தமிழ்நாட்டில் கால் ஊன்றி விட வேண்டும் என்பது நீண்டகால கனவாக உள்ளது. ஏற்கெனவே முழுமையாக நம்பி இருந்த ரஜினி என்கிற அஸ்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழந்து வரும் நிலையில், அதிமுக உள்கட்சி குழப்பம் மட்டுமே தற்போது டெல்லி மேலிடத்தின் துருப்பு சீட்டாக உள்ளது. எனவே விரைவில் அதிமுக உள்கட்சி குழப்பங்கள் தீர்த்து வைக்கப்படும்” அதேநேரத்தில், டெல்லி மேலிடம் இபிஎஸ் பக்கமே இருக்கும். அதற்குத்தான் இந்த 10 நாட்கள் என கூறியதுடன், ரேஸில் மல்லுகட்டும் ஓபிஎஸ், சமாதான படலத்துக்கு பின்னர், முதல்வர் பதவிக்கு இணையாக வேறொன்றை பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து விலகுவார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

எல்லாம் அதற்குத்தானா கோபால் ? என சொந்த கட்சியினரே சொல்லும் நிலையில் இருக்கிறார் ஓபிஎஸ். முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என சொல்வதற்கு ஏன் அக்டோபர் 7 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்று கட்சியினரே கேட்டு வருகின்றனர்.

-மணிக்கொடி மோகன்