ஓபிஎஸ் மனைவி மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 

ஓபிஎஸ் மனைவி மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். கடந்த 2 வாரங்களாக உடல்நலக்குறைவால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.

ஓபிஎஸ் மனைவி மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்; இன்று அவர் வீடு திரும்ப இருந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டது, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 6.45 மணிக்கு உயிரிழந்தார் என்று ஜெம் மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது.

ஓபிஎஸ் மனைவி மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இல்ல துணையை பிரிந்து வாடும் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.