உண்மையை சொல்லுங்கள்! அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

 

உண்மையை சொல்லுங்கள்! அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதா? என அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.

உண்மையை சொல்லுங்கள்! அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று தீவிரமாக இருந்த போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இறக்கவில்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது.

முதல்வராக பொறுப்பேற்றதும், பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ‘தமிழகம் ஆக்சிஜன் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் செங்கல்பட்டில், 13 பேர் எதிர்பாராதவிதமாக இறந்திருக்கின்றனர்’ என, குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதையும், அமைச்சர் பேட்டியையும் ஒப்பிட்டு பார்த்தால், முரண்பாடு தெள்ளத் தெளிவாகிறது. பிரதமருக்கு கடிதம் வாயிலாக முதல்வர் தெரிவித்த கருத்து உண்மையா? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டியில் தெரிவித்த தகவல் உண்மையா என்பதை விளக்க வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு உண்டு .எனவே, முதல்வர் இது குறித்து உடனடியாக ஆராய்ந்து, உண்மை நிலையை, தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.