வானதி சீனிவாசனின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்- ஓபிஎஸ்

 

வானதி சீனிவாசனின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்- ஓபிஎஸ்

பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்கள், தேசியச் செயலாளர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டன. ஆனால் அந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர்கள் ஒருவர் பெயர் கூட இல்லததால் அதிருப்தி நிலவிவந்த நிலையில், வானதி சீனிவாசனை மகளிரணி தேசிய தலைவராக நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் வானதி சீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “பாஜக-வின் தேசிய மகளிர் அணி தலைவராக தமிழகத்திலிருந்து திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
@VanathiBJP
அவர்களின் பணி மென்மேலும் சிறந்தோங்கிட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.