சத்துகள் நிறைந்த கருப்பட்டி – தானிய தோசை!

 

சத்துகள் நிறைந்த கருப்பட்டி – தானிய தோசை!

தோசை… தோசையம்மா தோசை அம்மா சுட்ட தோசை… அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை’ – சிறுகுழந்தைகளை மகிழ்விக்கும் இந்தப் பாடலைக் கேட்டிருப்போம். அன்றைக்கு அரிசி, உளுந்து மாவுகளில் செய்த தோசையுடன் கேழ்வரகு, தினை உள்ளிட்ட சிறுதானியங்களைச் சேர்த்து அரைத்த சத்தான தோசையை செய்து அசத்தலாம். சாப்பிடச் சுவையாக இருக்கும் இந்த தோசை பற்றி பார்ப்போம்.

சத்துகள் நிறைந்த கருப்பட்டி – தானிய தோசை!
சத்துமாவு தோசை:
புழுங்கலரிசி, ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, உளுந்து, கோதுமை, கேழ்வரகு, சோயா, தினை, வேர்க்கடலை, உடைத்த கடலை போன்றவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பாதாம்பருப்பு 15 எண்ணிக்கை, கருப்பட்டி ஒரு கப், தேங்காய்த் துருவல் கால் கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கருப்பட்டி தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் வெறும் கடாயில் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை சத்துமாவு பானமாகவும் செய்து அருந்தலாம். கருப்பட்டியுடன் நீர் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

சத்துகள் நிறைந்த கருப்பட்டி – தானிய தோசை!
கருப்பட்டி:
கெட்டியாக கரைத்த இந்த கருப்பட்டி கலவையுடன் ஏற்கெனவே அரைத்து வைத்த மாவினைச் சேர்த்து நன்றாகக் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தோசைக்கல்லில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு ஒவ்வொரு கரண்டியாக மாவை எடுத்து ஊற்றலாம்.

கருப்பட்டி இருப்பதால் தோசை சீக்கிரம் கறுத்துவிடும் என்பதால் சரியான பதத்தில் எடுக்க வேண்டும். சூடாக இருக்கும்போதே தோசையின்மீது தேங்காய்த் துருவலைச் சேர்த்துச் சாப்பிடலாம். வழக்கமாக காரச்சுவை உள்ள தோசைதான் சாப்பிடுவோம். ஆனால், இது இனிப்புச்சுவை உள்ள தோசை என்பதால் அதிகம் சாப்பிட முடியாது. ஆனால், உடல்நலத்துக்கு மிகவும் நல்லது.

சத்துகள் நிறைந்த கருப்பட்டி – தானிய தோசை!சத்தான உணவு:
இது ஒரு சமச்சீரான உணவு என்று சொன்னால் மிகையாகாது. ஃபோலிக் ஆசிட், பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சத்துகள் நிறைந்த இந்த தோசையை வாரம் ஒருநாள் செய்து சாப்பிடலாம். ஒரு நபர் மூன்று தோசை சாப்பிட்டால் காலை உணவில் கிடைக்கவேண்டிய அனைத்து சத்துகளும் கிடைத்துவிடும். எண்ணெய்க்குப் பதில் நெய் சேர்த்தால் பீட்டா கரோட்டின் கிடைக்கும்.

வெளிநாட்டு மோகத்தில் நூடுல்ஸ், சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் என சாப்பிடுவதற்குப் பதில் இதுபோன்ற சத்துமாவுகளில் தயாரித்த தோசைகளைச் செய்து சாப்பிட்டு உடல்நலம் காப்போம்.