பணி நீட்டிப்பு வழங்கக் கோரி, செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

 

பணி நீட்டிப்பு வழங்கக் கோரி, செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி

கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு, தமிழக அரசு பணி நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி, தேனியில் செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகி பிரேம் குமார் தலைமையில் ஏராளமான செவிலியர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

பணி நீட்டிப்பு வழங்கக் கோரி, செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள் பேசுகையில், “கொரோனா காலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அனைத்து மாவட்டங்களிலும், ஆட்சியர் மூலம் செவிலியர் பட்டய படிப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்த சுமார் 400-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வந்தனர். ஆனால், கடந்த அக்டோபர் மாதத்துடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதால் மிகுந்த வேதனையில் உள்ளோம். மேலும், எங்களை தொடர்ந்து பணிபுரிய வழிவகை செய்யக்கோரி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுககாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்தனர்.