இறந்த கொரானா நோயாளி-கூட இருந்த நர்ஸ் -அடுத்து அவர் செய்த அதிர்ச்சியான செயல்.

 

இறந்த கொரானா நோயாளி-கூட இருந்த நர்ஸ் -அடுத்து அவர் செய்த அதிர்ச்சியான செயல்.

இறந்த கொரானா நோயாளியின் செல்போன் மற்றும் ரெம்டேசிவிர் மருந்துகளை திருடிய ஒரு நர்ஸை போலீசார் விசாரித்து வருகின்றனர் .

இறந்த கொரானா நோயாளி-கூட இருந்த நர்ஸ் -அடுத்து அவர் செய்த அதிர்ச்சியான செயல்.

பஞ்சாப் மாநிலம் டெஹ்ராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அமன் தீப் என்பவர் தன்னுடைய தந்தையை கொரானா சிகிச்சைக்காக கடந்த வாரம் அனுமதித்தார் .அப்போது அங்கு பணிபுரியும் 21 வயதான செவிலியர் ஒருவர் அவரை கவனித்து கொண்டார் .இந்நிலையில் அந்த முதியவர் கடந்த வாரம் இறந்து விட்டார் .அதன் பிறகு  அந்த நர்ஸ் அந்த முதியவரின் செல்போன் மற்றும் ரெம்டேசிவிர் மருந்துகளை திருடி வெளியே சில நபர்களுக்கு விற்று விட்டார் .

பின்னர் அந்த முதியவரின் மகன் அவரின் சடலத்தினை மீட்க வந்தபோது, அவரின் தந்தையிடமிருந்த இந்த செல்போன் மற்றும்  ரெம்டேசிவிர் மருந்துகளை காணாததால் திடுக்கிட்டார் .அதன் பிறகு அவர் அந்த நர்ஸின் மீது சந்தேகப்பட்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்  .அப்போது  அந்த  நர்ஸ் இறந்தவரின் செல்போன் மாறும் ரெம்டேசிவிர் மருந்துகளை திருடி  வெளியே விற்று பணம் சம்பாதித்ததை  கண்டுபிடித்தார்கள் .பிறகு  அந்த பொருட்களை மீட்டு அந்த அமன் தீப்பிடம் ஒப்படைத்தனர் .அதன் பிறகு அந்த நர்ஸ் மற்றும் ஹாஸ்ப்பிட்டல் ஊழியர்களிடம்  விசாரித்து வருகின்றனர் .இப்போது அந்த நர்ஸ் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்