15 லட்சத்தை தொடவிருக்கும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனா நிலவரம்

 

15 லட்சத்தை தொடவிருக்கும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனா நிலவரம்

உலகளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளது இந்தியா. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன மத்திய மாநில் அரசுகள்.

இன்று வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்தோ, நோய் பரவியதும் அளிக்க வேண்டிய சிகிச்சை மருந்தோ கண்டுபிடிக்க வில்லை என்பது சோகமான செய்தி. ஆயினும் ரஷ்யா நாட்டில் ஓர் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவு செய்யவிருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

15 லட்சத்தை தொடவிருக்கும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனா நிலவரம்

விரைவில் மற்ற நாட்டின் ஆய்வு முடிகள் வெளியாகி, கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்புவோம்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகுக்கிறது. உலகளவில் ஒப்பிடும் போது, ​​உலகளாவிய சராசரியான ஒரு மில்லியனுக்கு 2425 ஐ விட 1469 ஆக மிகக் குறைந்த எண்ணிக்கையில் இந்தியா உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, உலகளாவிய சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது இறப்பு விகிதம் (CFR) குறைவாக இருப்பதை உறுதிசெய்தது. மேலும், அது தொடர்ந்து படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இறப்பு விகிதம் இன்று 2.04 சதவீதமாக உள்ளது.

15 லட்சத்தை தொடவிருக்கும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கோவிட்-19 குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,900 நோயாளிகள் குணமடைந்த நிலையில், இந்தியாவில் கோவிட்-19 இலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 14,27,005 ஐ எட்டியுள்ளது. குணமடைந்தோர் விகிதம், சீராக உயர்ந்து, 68.32 சதவீதமாக உள்ளது.

விரைவில் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து அனைவரும் குணம் அடைய வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.