என்.டி.பி.சி. லாபம் 16 சதவீதம் அதிகரிப்பு… பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு

என்.டி.பி.சி. லாபம் 16 சதவீதம் அதிகரிப்பு… பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு

என்.டி.பி.சி. லிமிடெட் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,876.36 கோடி ஈட்டியுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.சி. லிமிடெட் என்ற நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் , மின் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,876.36 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 15.66 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் என்.டி.பி.சி. லிமிடெட் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,351.28 கோடி ஈட்டியிருந்தது.

என்.டி.பி.சி. லாபம் 16 சதவீதம் அதிகரிப்பு… பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு
என்.டி.பி.சி.

என்.டி.பி.சி. லிமிடெட் 2020 டிசம்பர் காலாண்டில் என்.டி.பி.சி. லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.27,526.03 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3.56 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் என்.டி.பி.சி. லிமிடெட் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.26,578.33 கோடி ஈட்டியிருந்தது.

என்.டி.பி.சி. லாபம் 16 சதவீதம் அதிகரிப்பு… பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பு
மின் உற்பத்தி ஆலை

2020 டிசம்பர் காலாண்டில் என்.டி.பி.சி. லிமிடெட் நிறுவனத்தின் இதர வருவாய் 34 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.861.24 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், அந்த காலாண்டில் என்.டி.பி.சி. லிமிடெட் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.21,706.97 கோடியாக உயர்ந்துள்ளது. என்.டி.பி.சி. லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.3 வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.