காங்கிரஸ் உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தை

 

காங்கிரஸ் உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் அரசியல் களமும் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையும் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆட்சி கவிழ்ந்த பின் என்ஆர் காங்கிரஸ்-அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் உரிமை கோரவில்லை. இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாஜக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த மறுத்ததால் தான் அக்கூட்டணியிலிருந்து விலக அவர் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பாஜகவோ தேர்தலை சந்தித்துவிட்டு முதல்வர் வேட்பாளரை பற்றி பேசலாம் எனக் கூறி சமாளித்துவருகிறது.

காங்கிரஸ் உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தை

இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியுடன் ம.நீ.ம. மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன்
உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். இரு தரப்பினரும் கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முதலில் என்.ஆர். காங்கிரஸ் உடன் திமுக கைக்கோர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாதை மாறி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.