இபிஎஸ், ஓபிஎஸ்சை தொடர்ந்து ராமதாசும் எதிர்ப்பு

 

இபிஎஸ், ஓபிஎஸ்சை தொடர்ந்து ராமதாசும் எதிர்ப்பு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் ராமதாஸும் பென்னிகுவிக் வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இபிஎஸ், ஓபிஎஸ்சை தொடர்ந்து ராமதாசும் எதிர்ப்பு

மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பதற்காக, மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் வாழ்ந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வீட்டை இடிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அவர் மேலும், கலைஞர் பெயரில் அறிவை வளர்க்கும் கருவியான நூலகத்தை அமைப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிப்பது முறையல்ல. பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் வசிப்பிடமாக உள்ள அந்த இல்லத்தை பென்னிகுவிக் நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும். மதுரை பாண்டி கோயில் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அதிகமாக உள்ளன. அங்கு இப்போது திட்டமிடப்பட்டதை விட இன்னும் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கலாம். அதற்காக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.