இனி சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

 

இனி சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்தார். கடந்த 16ம் தேதி கார்த்திகை மாதத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இனி சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

இதைத் தொடர்ந்து டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் அச்சத்தினால் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.தினந்தோறும் ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவர் என்று சபரிமலை தேவசம் போர்டு அறிவித்தது .

இனி சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

இந்நிலையில் சபரிமலையில் தினமும் 2,000க்கு பதில் 5,000 பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் 5ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.