தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் : 2 நாட்களுக்கு கனமழை தொடரும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் : 2 நாட்களுக்கு கனமழை தொடரும்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் 11 இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் : 2 நாட்களுக்கு கனமழை தொடரும்!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், “தமிழகத்தில் இதுவரை 20 இடங்களில் மிக கன மழையும், 50 இடங்களில் கன மழையும் பதிவானது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% குறைவாக பெய்துள்ளது. நேற்று வரை 16 சதவீதம் வரை குறைவாக இருந்த நிலையில் ஒரே நாளில் 14 சதவீதம் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. மன்னார் வளைகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலையில் தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் கடலூர்,நாகை, திருவாரூர் , ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக கனமழை தொடரும்” என்றார் .

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் : 2 நாட்களுக்கு கனமழை தொடரும்!

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும். அதே சமயம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது எனவும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.