நாளை மறுநாளுடன் வடகிழக்கு பருவமழை நிறைவா? – வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

 

நாளை மறுநாளுடன் வடகிழக்கு பருவமழை நிறைவா? – வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

தென்மாநிலங்களில் இருந்து ஜன.19ம் தேதியோடு வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுறழ்சியால் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 20ம் தேதி வரை 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாளை மறுநாளுடன் வடகிழக்கு பருவமழை நிறைவா? – வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நெற்பயிர்கள் அறுவடை செய்யும் நேரத்தில், மழை பெய்ததால் மழை நீரில் மூழ்கி வீணானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பல இடங்களில் அறுவடை செய்த நெல்மணிகள், மழையில் நனைந்து முளைத்திருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்ட நிலையிலும், விவசாயிகள் அதிலிருந்து மீளவில்லை. இத்தகைய சூழலில், நாளை மறுநாளுடன் பருவமழை நிறைவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.