அக்டோபர் 25ம் தேதிக்கு பிறகு தொடங்குகிறதா வடகிழக்கு பருவமழை?

 

அக்டோபர் 25ம் தேதிக்கு பிறகு தொடங்குகிறதா வடகிழக்கு பருவமழை?

வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோவை, தேனி, விழுப்புரம், நீலகிரி உட்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. அக்டோபர் 3ம் வாரத்தில் பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பேரில், தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அக்டோபர் 25ம் தேதிக்கு பிறகு தொடங்குகிறதா வடகிழக்கு பருவமழை?

ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பேசிய முதல்வர், புயலே வந்தாலும் சந்திக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அக்.25ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் அக்.22ம் தேதி வரை மேற்கு திசை காற்று நிலவக்கூடிய சூழல் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.