கவிழ்ந்த நாராயணசாமி அரசு : புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை!

 

கவிழ்ந்த நாராயணசாமி அரசு : புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை!

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் அதிரி புதிரியாக மாறியது. ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், முதல்வர் நாராயணசாமியின் அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு எதிர்க்கட்சிகள் குரலெழுப்பியதால், கடந்த பிப்.22ம் தேதி காலை துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கவிழ்ந்த நாராயணசாமி அரசு : புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை!

அதில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, ஆளுநரை சந்தித்த நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை தமிழிசையிடம் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் தான் காரணம் என கடுமையாக சாடினார். நாராயணசாமியின் ஆட்சி தற்போது கவிழ்ந்திருப்பதால் புதுச்சேரியின் நிலை என்ன? என்ற கேள்வி வெகுவாக எழுந்திருக்கிறது.

கவிழ்ந்த நாராயணசாமி அரசு : புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை!

இந்த நிலையில், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார். புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் யாரும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்பதால் இந்த முடிவை தமிழிசை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.