இந்த தொகுதியில் தான் அதிக வேட்பாளர்கள்.. நிறைவு பெற்ற வேட்பு மனு தாக்கல்!

 

இந்த தொகுதியில் தான் அதிக வேட்பாளர்கள்.. நிறைவு பெற்ற வேட்பு மனு தாக்கல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில வாரங்களில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்ற அரசியல் கட்சிகள், நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்தன. இதையடுத்து, கடந்த 12ம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் பணி தொடங்கியது. தொடக்க நாளன்றே துணை முதல்வர் ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். 13 மற்றும் 14ம் தேதி விடுமுறை என்பதால் அன்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்த தொகுதியில் தான் அதிக வேட்பாளர்கள்.. நிறைவு பெற்ற வேட்பு மனு தாக்கல்!

கடந்த 15ம் தேதி ஒரு பட்டாளமே மனுத் தாக்கல் செய்தது. எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட முதல்வர் வேட்பாளர்களும் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலரும் அன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். 15ம் தேதி தான் அதிகப்பட்ச வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4,500 க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 3,760 ஆண்கள், 739 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று சுயேட்சையாக போட்டியிட அதிகமானோர் மனு தாக்கல் செய்ததாகவும் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 72 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.