விரைவில் நோக்கியா லேப்டாப் ? இணையத்தில் கசிந்த தகவல்கள்!

 

விரைவில் நோக்கியா லேப்டாப் ? இணையத்தில் கசிந்த தகவல்கள்!

முன்னணி செல்போன் நிறுவனமான நோக்கியா லேப்டாப் தயாரிப்பில் இறங்கி உள்ளது. விரைவில் நோக்கியா லேப்டாப்கள் இந்திய சந்தையில் விற்பனையாக உள்ளது. போன் தயாரிப்பில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்ந்த நோக்கியா, ஸ்மார்போன் தயாரிப்பில் உரிய நேரத்தில் இறங்காததால் மிகப்பெரிய தேக்கத்தைக் கண்டது. கிட்டத்தட்ட நோக்கியா நிறுவனம் மூடப்படும் நிலைக்கு சென்றது. பல நாடுகளில் அதன் ஆலைகள் விற்பனை செய்யப்பட்டன. அதன் பின்னர், ஹெச் எம் டி நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை கையகப்படுத்தி ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கி ஓரளவுக்கு சந்தையை பிடித்துள்ளது. எனினும் நோக்கியா நிறுவனத்தால் தனது பழைய சந்தையை பிடிக்க முடியவில்லை.

விரைவில் நோக்கியா லேப்டாப் ? இணையத்தில் கசிந்த தகவல்கள்!

இந்த நிலையில், லேப்டாப் தயாரிப்பிலும் நோக்கியா களம் இறங்கி உள்ளது. விரைவில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ர் மூலம் நோக்கியா லேட்டாப்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 14 இன்ச் திரையுடன், 1.1 கிலோ எடையில், நோக்கியா லேப்டாப் இருக்கும் என்கிற தகவல்களும் தெரிய வந்துள்ளன. கடந்த மாதம் இந்திய தரச்சான்று நிறுவன இணையதளத்தில் நோக்கியா லேப்டாப் தொடர்பான சில சான்றிதழ்கள் வெளியாகியுள்ளன. இந்த சான்றிதழ்கள் தற்போது டிவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் கசிந்துள்ளன. இது தொடர்பாக புதிய மின்னணு பொருட்கள் குறித்து ஆலோசனை அளிக்கும் முகுல் சர்மா, வெளியிட்டுள்ள செய்தியில், நோக்கியா லேப்டாப்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் நோக்கியா லேப்டாப் ? இணையத்தில் கசிந்த தகவல்கள்!

இதன் மூலம் விரைவில், இந்தியாவில் நோக்கிய லேப்டாப்கள் விற்பனைக்கு வர உள்ளது உறுதியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 5க்கும் மேற்பட்ட மாடல்களில் நோக்கியா லேப்டாப்கள் வெளியாக உள்ளன. இண்டெல் ஐ5 மற்றும் ஐ3 பிராசஸர்கள் , மைக்ரோசாப்ட் 10 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். இந்தியாவில் ஏற்கெனவே நோக்கியா டிவி உள்ளிட்ட சாதனங்கள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.