மூன்று பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு #Nobel

 

மூன்று பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு #Nobel

உலகின் உயரிய விருதான நோபல் விருதுகளின் அறிவிப்புகள் வெளிவர தொடங்கி விட்டனர். 5 நாட்கள் அறிவிக்கப்பட உள்ள நோபல் பரிசுகளில் முதல் நாளான இன்று மருத்துவத்துறைக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோக்ஹோமிலிருந்து நோபல் பரிசை வென்றவர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

மூன்று பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு #Nobel

2020 ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அளிக்கப்படுகிறது. ஹார்வே ஹே.ஆல்டர், மைக்கல் ஹங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகிய மூவருக்கும் நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு #Nobel

ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டறிந்ததற்காக மூவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

நாளை இயற்பியலுக்கும், அக்டோபர் 7 ஆம் தேதி வேதியியலுக்கும், அக்டோபர் 8 ஆம் தேதி இலக்கியத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. அக்டோபர் 9 இல் அமைதிக்கான நோபல் பரிசும், அக். 10 ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வரும் கிரேட்டா துன்பர்க் பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.