‘குயின் தொடரை ஒளிபரப்ப தடையில்லை’..ஜெ.தீபாவின் கோரிக்கை நிராகரிப்பு!

‘குயின் தொடரை ஒளிபரப்ப தடையில்லை’..ஜெ.தீபாவின் கோரிக்கை நிராகரிப்பு!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான குயின் வெப் சீரிஸை ஒளிபரப்ப தடையில்லை என உயர்நீதி நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் இயக்குனர் ஏஎல் விஜய் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். இந்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் குயின் என்ற பேரில் வெப் சீரிஸ் ஆக எடுத்துள்ளார். அந்த வெப் சீரீஸ் தற்போது ஆன்லைனில் வெளியாகி வருகிறது.

‘குயின் தொடரை ஒளிபரப்ப தடையில்லை’..ஜெ.தீபாவின் கோரிக்கை நிராகரிப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை, தனது சம்மதம் இல்லாமல் படமாக்கியதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். மேலும், அந்த வழக்கில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்த அவர், ஜெயலலிதாவின் வாரிசாக இந்த வழக்கை தொடருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தன்னை பற்றிய விவரங்களை வெளியிட விரும்பாத ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்குவது தவறு என்றும் தெரிவித்திருந்தார்.

‘குயின் தொடரை ஒளிபரப்ப தடையில்லை’..ஜெ.தீபாவின் கோரிக்கை நிராகரிப்பு!

இந்த நிலையில் இன்று ஜெ,தீபா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குயின் தொடரை ஒளிபரப்ப தடையில்லை என கூறிய நீதிபதிகள், தலைவி படத்திற்கும் குயின் இணையதள தொடருக்கும் தடை கொரிய தீபாவின் வழக்கை செப்.28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.