“இறக்குமதி வரியை குறைக்க முடியாது” – அடம்பிடிக்கும் மத்திய அரசு; பேக் அடிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா!

“இறக்குமதி வரியை குறைக்க முடியாது” – அடம்பிடிக்கும் மத்திய அரசு; பேக் அடிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா!

இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உருவாக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்துவருகிறது. இந்திய நிறுவனங்களான ஓலா, உபெர், பவுன்ஸ், வோகோ உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை இந்தியாவில் தயாரித்துவருகின்றன. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 1 சதவீதத்துக்கும் குறைவானதே. உற்பத்தி ஒருபுறம் இருந்தாலும் நுகர்வு குறைவாகவே இருந்தது. மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

“இறக்குமதி வரியை குறைக்க முடியாது” – அடம்பிடிக்கும் மத்திய அரசு; பேக் அடிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா!

இதற்காக உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிற்கு அழைத்துவர மத்திய அரசு ஆர்வம் காட்டிவந்தது. டெஸ்லாவின் சந்தை மதிப்பீடு, மக்கள் மத்தியில் இருக்கும் புகழ் அடிப்படையில் இந்தியாவிற்குள் இழுக்க டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குடன் நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. இதனால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் ஆர்வம் காட்டுவார்கள், இந்தியாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

“இறக்குமதி வரியை குறைக்க முடியாது” – அடம்பிடிக்கும் மத்திய அரசு; பேக் அடிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா!

அதன் முதல் அடியாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துடன் கர்நாடகா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் முதற்கட்டமாக பெங்களூருவில் தனது உற்பத்தி ஆலையைத் துவங்கவிருக்கிறது. அதன் முதல் அடியாக மூன்று இயக்குநர்களையும் நியமித்தது. ஆனால் மத்திய அரசுக்கு இது போதுமானதாக இல்லை. இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தளத்தை டெஸ்லா நிறுவனம் அமைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் பிரதான நோக்கம். ஆனால், எலான் மஸ்க் பெங்களூருவில் உற்பத்தி ஆலையை மட்டுமே நிறுவ ஒப்புக்கொண்டுள்ளார். இது மத்திய அரசுக்கு ஏமாற்றம்தான்.

“இறக்குமதி வரியை குறைக்க முடியாது” – அடம்பிடிக்கும் மத்திய அரசு; பேக் அடிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா!

இச்சூழலில் டெஸ்லா நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒரு ஏமாற்றத்தை வழங்கியுள்ளது. வெளிநாட்டு கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்கும் திட்டமில்லை என்ற அறிவிப்பே ஏமாற்றத்திற்குக் காரணம். கனரக மற்றும் மின் துறை இணையமைச்சர் கிருஷ்ணர் பால் குர்ஜார் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவில் எந்தவகை காராக இருந்தாலும் அதற்கு ஒரே மாதிரியான இறக்குமதி வரியே விதிக்கப்படுகிறது. சுமார் ரூ.30 லட்சத்துக்கு கீழ் இருக்கும் கார்களுக்கு 60 சதவீத வரியும் அதற்கு மேல் இருக்கும் கார்களுக்கு 100 சதவீத வரியும் விதிக்கப்படுகின்றன.

“இறக்குமதி வரியை குறைக்க முடியாது” – அடம்பிடிக்கும் மத்திய அரசு; பேக் அடிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா!

தங்களுடைய எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இறக்குமதி வரி 40 சதவீதமாக இருக்க வேண்டும் என டெஸ்லா கோரிக்கை வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் கார்களுக்கு விதிக்கப்படும் அதே வரி விகிதம் எலட்க்ட்ரிக் கார்களுக்கும் விதிக்கக் கூடாது என வாதாடுகிறது. இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தால் இந்தியாவிலேயே கார்களைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கும் வேளையில், இந்தியாவில் எங்கள் கார்களை அறிமுகம் செய்வதிலேயே பல்வேறு தடங்கல்கள் வருவது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக டெஸ்லா நிறுவனர் மஸ்க் கவலைப்பட்டுள்ளார்.