கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி… 87 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி… 87 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக!

87 ஆண்டு கால ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அந்தத் தொடர் நடத்தப்படாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி… 87 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக!

ரஞ்சி கோப்பை போட்டி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரியில் முடிவடையும். சர்வதேச டெஸ்ட் போட்டியின் ஆட்ட அமைப்பை ரஞ்சி போட்டிகளும் ஒத்திருக்கும். மொத்தமாக நான்கு இன்னிங்ஸ்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும். ஒவ்வொரு மாநில கிரிக்கெட் வாரியங்களையும் பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்கும்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி… 87 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக!

இந்தியாவின் சார்பில் முதன்முதலாக சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஞ்சித்சின்ஜியைப் போற்றும் வகையில் 1934-35ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ரஞ்சி கோப்பை நடைபெற்றுவந்தது. ஆனால் இந்தாண்டு கொரோனா சூழலால் நடத்தப்படாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. 87 ஆண்டு கால வரலாற்றில் ரஞ்சி கோப்பை நடத்தாமல் போவது இதுவே முதல்முறை. மிக முக்கியமான உள்நாட்டு தொடராகக் கருதப்படும் ரஞ்சி கோப்பையின் மூலம் தான் இந்திய அணிக்கு பல திறமையான வீரர்கள் இனங்காணப்பட்டனர்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி… 87 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக!

லாக்டவுனுக்கு பிறகு கொரோனா பாதுகாப்புடன் சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்றது. தற்போது அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மற்றொரு உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே நடத்தப்படும் என்று பிசிசிஐ உறுதியளித்துள்ளது. இதனிடையே ஏப்ரல்-மே மாதத்தில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெறுகிறது. அதற்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.