அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் வைக்க கட்டாயமில்லை – உயர் நீதிமன்றம் அதிரடி!

 

அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் வைக்க கட்டாயமில்லை – உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழக அரசு அலுவலங்களில் குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் படங்களை வைக்க உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் வைக்க கட்டாயமில்லை – உயர் நீதிமன்றம் அதிரடி!

அந்த மனுவில், “1990ஆம் ஆண்டு அம்பேத்கர் படமும், 2006ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சி, காயிதே மில்லத், இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர், தமிழன்னை புகைப்படங்கள் வைக்க அனுமதித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன” என குறிப்பிடப்பட்டிருந்தது.

Madras High Court - Wikipedia

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதும், இந்தப் படங்களை வைக்க வேண்டும் என அந்த அரசாணையில் கட்டாயப் படுத்தப்படவில்லை” என்றார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பிரதமர், குடியரசு தலைவர் படங்களை வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.