கொரோனாவுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கும் மதுரை! – சமூக ஆர்வலர் வேதனை

 

கொரோனாவுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கும் மதுரை! – சமூக ஆர்வலர் வேதனை

மதுரை மாவட்டத்துக்குள் நுழைபவர்களுக்கு எந்த பரிசோதனையும் நடைபெறாதது கொரோனாவை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்பது போன்றதாகும், கொரோனா பரவலைத் தடுக்க தென்காசி மாவட்டம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடுமையாக பின்பற்றி வருகிறது.

கொரோனாவுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கும் மதுரை! – சமூக ஆர்வலர் வேதனை

அது போன்று ஒவ்வொரு மாவட்டமும் பின்பற்றினால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

http://


பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் தன்னுடைய சொந்த ஊரான தென்காசிக்கு சென்றது பற்றியும் வழியில் சந்தித்த அனுபவங்கள் பற்றியும் பதிவிட்டுள்ளார். அதில், “சென்னையிலிருந்து முறையாக “இ-பாஸ்” வாங்கி நேற்று தென்காசி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தோம். பல இடங்களில் விசாரணை. மாவட்ட எல்லையில் உள்ள செக் போஸ்ட்டில் இருந்த வருவாய்த் துறை ஊழியர்கள், சென்னையிலிருந்து வரும் அனைவரிடமிருந்தும் அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

http://


பின்னர் அனைவரும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள “தனிமைப்படுத்தும் மையத்தில்” தங்க வைக்கப்பட்டோம். விருப்பப்பட்டால் தனிமைப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனியார் விடுதியில் (சொந்த செலவில்) தங்கிக்கொள்ளலாம். நாங்கள் அவ்வாறு தங்கவைக்கப்பட்டோம். அனைவருக்கும் சோதனை செய்கிறார்கள், சோதனை முடிவுகள் வரும்வரை அங்கேயே இருக்கவேண்டும், தொற்று இல்லையெனில் செல்லவேண்டிய இடத்திற்குப் போகலாம், தொற்று உறுதியெனில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள்.
எங்களுக்கான சோதனை முடிவுகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் போதுதான் இதை எழுதுகிறேன். தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் இத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள், கொரோனா பரவக்கூடாது என்கிற கவலையும் அக்கறையும் இந்த நெறிமுறைகளில் தெரிகிறது. சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற சோதனைகள் அவசியம்.
ஆனால் இதே காலகட்டத்தில், மதுரைக்கு சென்றவர்களுக்கு எந்த சோதனையும் செய்யப்படவில்லை. மதுரை போன்ற மக்கள் திரள் நிரம்பிய ஒரு மாவட்டத்துக்குள் எந்த விதமான சோதனையும், நெறிமுறைகளும் இல்லாமல் யாரும் உள் நுழையலாம் என்பது கொரொனாவை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்பது போல. இன்று சென்னை நாளை மதுரை என்றொரு நிலை உருவாகிவிடக் கூடாது என்றுதான் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த பல வாரங்களாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தென்காசியைப் பின்பற்றுவதில் என்ன தயக்கம்?” என்று கூறியுள்ளார்.