புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா! ஆனால் முழு ஊரடங்கு இல்லை – முதல்வர் நாராயணசாமி

 

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா! ஆனால் முழு ஊரடங்கு இல்லை – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கடைகளை மூடுவது மட்டுமே முழுமையான தீர்வு ஆகாது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் விழிப்புடன் இருக்க வேண்டும் இதுவே முக்கியம். ஆகவே வரும் ஞாயிற்றுக்கிழமை மூகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் உள்ளதால் ஆகவே வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு இருக்காது. இதை சாதகமாக மக்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.” என தெரிவித்தார்.

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா! ஆனால் முழு ஊரடங்கு இல்லை – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது. மேலும், புதுச்சேரியில் கொரோனாவில் இருந்து 584 பேர் குணமடைந்த நிலையில், 553 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்றால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.