கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணமா? – நம்பிக்கையூட்டும் எய்ம்ஸ் அறிக்கை!

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணமா? – நம்பிக்கையூட்டும் எய்ம்ஸ் அறிக்கை!

இந்தியாவை உருக்குலைத்த கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தற்போது குறைந்துவருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவைக் கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதன்படி பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் இது தற்காலிகாக தீர்வு மட்டுமே, தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆதலால் ஊடரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணமா? – நம்பிக்கையூட்டும் எய்ம்ஸ் அறிக்கை!

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒருவித தயக்கம் இருக்கிறது. தெரிந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இறந்துவிட்டார்கள் என்ற செவிவழி செய்திகளைக் கேட்டு அச்ச உணர்வுடன் இருக்கிறார்கள். இதுதவிர வாட்ஸ்அப்களில் வரும் வதந்திகளையும் கேட்டு பயத்துடன் உள்ளார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 99% சதவீதம் பேர் ஆரோக்கியமாக இருந்தாலும், அதை மக்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணமா? – நம்பிக்கையூட்டும் எய்ம்ஸ் அறிக்கை!

இதுதொடர்பாக அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள எய்ம்ஸ், “கொரோனா தடுப்பூசி 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். மீதம் உள்ளோர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின்போது வைரஸ் பாதிப்பு அனைவருக்கும் ஒன்றாகவே இருந்தது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணமா? – நம்பிக்கையூட்டும் எய்ம்ஸ் அறிக்கை!

காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்தது. தடுப்பூசி போடாமல் கொரோனா பாதித்தவர்களைப் போன்றே இது இருந்தது. பாதிப்படைந்தோர் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மற்ற நோயாளிகளைப் போலவே மருத்துவமனையில் சேர்க்கும் நிலையும் ஏற்பட்டது. இருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மரணம் நிகழவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெருமளவில் பாதிப்பு குறைவதாக ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது. ஆகவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.