இந்த 4 மாநிலங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பலியாகவில்லையாமே?

 

இந்த 4 மாநிலங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பலியாகவில்லையாமே?

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்களுக்குக் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. நிலைமை கைமீறி போய்விட்டதாகவும், மக்கள் எதையும் எதிர்கொள்ள துணிவுடன் இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக மே மாதம் மத்தியில் மட்டுமே தினசரி 4 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 4 மாநிலங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பலியாகவில்லையாமே?
இந்த 4 மாநிலங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பலியாகவில்லையாமே?

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்க்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை முதல் முறையாக 3 ஆயிரத்தைத் தாண்டிச் சென்றுள்ளது. இருப்பினும் ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு செய்தியும் கிடைத்துள்ளது. ஆம் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 மாநிலங்களிலும் 4 யுனியன் பிரதேசங்களிலும் ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த 4 மாநிலங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பலியாகவில்லையாமே?

தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, லடாக், அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 4 யுனியன் பிரதேசங்களிலும் திரிபுரா, மிசோரம், நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதற்குக் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் துரிதப்படுத்தியது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும் யுனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒட்டுமொத்த இந்தியா பாதிப்பில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் மட்டுமே 71.68 விழுக்காடு பாதிப்பு பதிவாகியுள்ளது.